Elections 2019: அடிப்படையில் சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்க குடிமகன். அவர் இங்கு ஓட்டுப்போட முடியாது.
Chennai: Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை வாக்களித்தார் என புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. அதில் வாக்களிப்பதன் அவசியத்தை தெரிவிக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்.
அதில் ஜி.எல். நிறுவனத்தின் சிஇஓ என்ற கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். அந்த கேரக்டர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவும் மதுரையில் பிறந்தவருமான சுந்தர் பிச்சையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு எடுக்கப்பட்டது.
.
சர்காரில் ஓட்டுப் போடுவதற்கென்ற விஜய் அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வருவார். அப்படி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்து தேர்தலில் வாக்களித்தார் என்பது போன்ற புகைப்படம் வைரலானது. கடைசியில் அந்த புகைப்படம் 2017-ல் சுந்தர் இந்தியாவுக்கு வந்தபோது ஐ.ஐ.டி.காரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை, சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் ஐஐடி காரக்பூரில் பட்டப்படிப்பை முடித்த சுந்தர் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று அங்கு ஸ்டான்போர்டு மற்றும் பென்னிசில்வேனியாவில் பட்டங்களை பெற்றார்.
தற்போது உலகின் மிக முக்கியமான நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் சுந்தர் பிச்சை உள்ளார். தற்போது அவர் அமெரிக்க குடிமகன் என்பதால் அவரால் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என்பதே உண்மை.