This Article is From Apr 15, 2019

''நாட்டை நேசித்தால் பாகிஸ்தானைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்'' : பாஜகவை விமர்சித்த பிரியங்கா!!

பாஜக தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தானை வசைபாடி வருகின்றனர். இதனை பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

''நாட்டை நேசித்தால் பாகிஸ்தானைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்'' : பாஜகவை விமர்சித்த பிரியங்கா!!

விளம்பரத்திற்காக தேவையில்லாததை பாஜக பேசி வருவதாக பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

Lucknow:

நாட்டை நேசித்தால் தேர்தல் பிரசாரத்தின்போது பாகிஸ்தானை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பாஜகவை பிரியங்கா காந்தி கண்டிப்புடன் கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கட்டுப்பாட்டின் கீழ் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன. 

தேர்தலையொட்டி லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது -

மத்திய அரசு நாட்டை நேசிக்கிறது என்றால் உயிரிழந்த ராணுவ வீரர்கள் இந்து முஸ்லிம் என யாராக இருந்தாலும் சரி. அவர்களை மதிக்க வேண்டும். நாட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த சுதந்திர போராட்ட வீரர்களை இழிவாக பேசக் கூடாது. 

நாட்டை நேசித்தால் தேர்தல் பிரசாரத்தின்போது பாகிஸ்தானைப் பற்றி பேசுவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நிலைபற்றி பேசலாம். 

மத்திய பாஜக அரசு நாட்டை நேசிக்கிறது என்றால் விவசாயிகளின் குரலை ஏன் செவி சாய்க்கவில்லை. மதத்தின் பெயரால் மக்கள் கொல்லப்படும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அரசு ஏன் குரல் எழுப்பவில்லை? பாஜக அரசு நாட்டை நேசிக்கிறது என்றால் மக்களின் குரல் எழுவதை ஏன் தடுக்கப் பாக்கிறது. 

பிரசாரத்தின்போது இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை குறித்து புகார் தெரிவிப்பதை காண முடிகிறது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இலவச மருத்துவ சிகிச்சையை குறிப்பிட்டுள்ளோம். நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இலவசமாக ஆரோக்யம் கிடைப்பதாக இருந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

.