This Article is From Aug 01, 2019

நாடாளுமன்றம் காகிதமில்லா மாளிகையாக வேண்டும் - சபாநாயகர் ஓம் பிர்லா

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கூறுகையில், நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், எல்லா நேரத்திலும் வைஃபை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

நாடாளுமன்றம் காகிதமில்லா மாளிகையாக வேண்டும் - சபாநாயகர் ஓம் பிர்லா

உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை டிஜிட்டல் அல்லது காகித வடிவத்தில் தேர்வு செய்ய வேண்டியதிருக்கும் என்றார்.

New Delhi:

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று காகித பயன்பாடு ஏதுமில்லாமல் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதனால் கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று கூறியுள்ளார். 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை டிஜிட்டல் அல்லது காகித வடிவத்தில் தேர்வு செய்ய வேண்டியதிருக்கும் என்றார். 

ஜீரோ ஹவரின் பொது, சபாநாயகர் பிர்லா உறுப்பினர்களிடம் காகிதத்தை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது மரங்களை பாதுகாக்க உதவும் என்று கூறினார். 

இது குறித்து உறுப்பினர்களின் கருத்தைக் கேட்ட சபாநாயகர், சபையை ஒரே நாளில் காகிதமில்லாமல் மாற்ற முடியாது. இது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். மக்களவை காகிதமில்லாத மாளிகை என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார். 

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கூறுகையில், நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், எல்லா நேரத்திலும் வைஃபை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

சபாநாயகர்  புதிய செயல்முறை உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் பேசும் உறுப்பினரின் பெயர், கட்சி மற்றும் தொகுதி ஆகியவை திரையில் காண்பிக்கப்படும். உடன் அவர்கள் பேசும் நேரமும் திரையில் காணலாம் என்று கூறினார். 

.