'சாதிக்க வேண்டும். அதே நேரத்தில் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகி விடக் கூடாது' என்று மாணவர்களுக்கு பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.
Kota: பள்ளித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விடக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின்போது தேர்வு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினரான ஓம் பிர்லா, பள்ளித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விடக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
இந்த இளைஞர் திருவிழா வர்த்தக கல்லூரியில் 2 நாட்களுக்கு நடைபெற்றது.
விழாவில் கோடா மாவட்ட ஆட்சியர் ஓம் கசேரா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவா, ராஜன் துஷ்யந்த், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இசை நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுக்கள், கேளிக்கை நிகழ்வுகளுடன் கூடிய இந்த திருவிழாவில் சுமார் 1.75 மாணவர்கள் பங்கேற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)