லோக்பால் உறுப்பினர்களுக்கான அறிவிப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
New Delhi: ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலின் தலைவராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 4 பேர், முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் 4 பேர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழுவினர் பினாகி சந்திர கோஷை தேர்வு செய்து கடந்த வாரம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தேர்வுக்குழுவில் மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த 1997-ல் நீதிபதியாக கோஷ் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்திற்கு அவர் கடந்த 2013-ல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். ஆந்திராவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோஷ இருந்தபோது, ஊழல் வழக்கு ஒன்றில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
லோக்பால் மசோதா கடந்த 2013-ல் கொண்டு வரப்பட்டது. ஊழலை தடுக்கும் வகையில் மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பும் செயல்படும்.