This Article is From Mar 24, 2019

''திமுக ஒரு பச்சோந்தி; அதிகாரத்திற்கு வர அடிக்கடி கொள்கை மாற்றும்'' : எடப்பாடி பழனிசாமி

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

''திமுக ஒரு பச்சோந்தி; அதிகாரத்திற்கு வர அடிக்கடி கொள்கை மாற்றும்'' : எடப்பாடி பழனிசாமி

மக்கள் நலனை கருதி அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது : தமிழக முதல்வர்

Vellore/Dharmapuri:

திமுக ஒரு பச்சோந்தி என்றும் அதிகாரத்திற்கு வர அந்த கட்சி அடிக்கடி கொள்கைகளை மாற்றும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கொளுத்தும் வெயிலை பாராமல் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்யும் முதல்வர், திமுகவை கடுமையாக தாக்கி பேசுகிறார்.

 வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

திமுக ஒரு பச்சோந்தி கட்சி. அதிகாரத்திற்கு வருவதற்கு அக்கட்சி அடிக்கடி கொள்கைகளை மாற்றி வரும். சந்தர்ப்பவாதம் காரணமாக திமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருதி அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. 

ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்குவதை நிறத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அதிமுக அரசு ரூ. 6 கோடியை மானியமாக வழங்கி வருகிறது. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக இருந்து வருகிறது. 

முத்தலாக் விவகாரம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்டபோது அதனை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் பேசினர். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யப்படவில்லை. 

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக போதுமான நிதியை அவர் ஒதுக்கவில்லை. சமீபத்தில் அதிமுக அரசு நடத்திய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழகத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 

.