This Article is From Apr 03, 2019

''தமிழக மக்களிடம் பரிசு பெட்டி சின்னம் சென்று சேர்ந்து விட்டது'' - டிடிவி தினகரன் உற்சாகம்

மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்துள்ளது.

Advertisement
இந்தியா Written by

மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை.

தமிழக மக்களிடம் கட்சி சின்னமான பரிசுப் பெட்டி சென்று சேர்ந்து விட்டதென்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தளவில் டிடிவி தினகரன் துணை பொது செயலாளராக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்துள்ளது. மத்திய சென்னை தொகுதியை எஸ்.டி.பி.ஐ.க்கு ஒதுக்கியதுபோக மற்ற இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எஸ். முத்துக்குமாருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது- 

மக்களவை தேர்தலை பொறுத்தளவில் நமக்கு சின்னம் கிடைக்க கூடாது என்று பல்வேறு தடைகளை எற்படுத்தினார்கள். கடைசியாக உச்ச நீதிமன்றத்திற்கு  சென்றுதான் நாம் சின்னத்தை பெற்றோம்.

Advertisement

மோடிக்கு எதிராக கூட்டணி அமைக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் யாருக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது என்று மக்களுக்கே நன்றாக தெரியும். 

சின்னத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் 36 சின்னங்களை காண்பித்தார்கள். அவற்றில் 35 சின்னங்கள் தேறாதவை. நல்லபடியாக நமக்கும் பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்தது. 

Advertisement

இந்த சின்னம் தமிழக மக்கள் அனைவரிடமும் சென்று சேர்ந்து விட்டது. இதற்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதுதான் முக்கிய காரணம்.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement