This Article is From Mar 02, 2019

‘’அதிமுக கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றி வருவதால்தான் பாஜகவுடன் கூட்டணி’’: தம்பிதுரை

தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக – பாஜக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

‘’அதிமுக கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றி வருவதால்தான் பாஜகவுடன் கூட்டணி’’: தம்பிதுரை

தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி
  • அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது
  • இன்று புதிய தமிழகத்திற்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது அதிமுக

அதிமுக கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றி வருவதாகவும், அதனால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக – புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகளும், புதிய தமிழகத்திற்கு ஒன்றையும் அதிமுக ஒதுக்கியுள்ளது.

தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சி எந்த முடிவு எடுக்கும் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை. இதற்கிடையே தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கூட்டணி மற்றும் தேர்தல் குறித்து அதிமுக எம்.பி. தம்பிதுரை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

அதிமுகவின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. எனவே இந்த கூட்டணி வளர்ந்தால், தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். இத்தகைய காரணங்களுக்காக நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

.