கட்சியில் சேர்ந்த சத்ருகன் சின்ஹாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- பாஜக தொடங்கிய நாளில் காங்கிரசில் இணைந்துள்ளார் சின்ஹா
- சின்ஹா சேருவதற்கு லாலுபிரசாத் யாதவ் முக்கிய காரணம்
- பீகாரில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
New Delhi: பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்துள்ளார். பாஜகவை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.
பாகஜக இன்று கட்சியின் தொடக்க விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் கட்சிக்கு குட்பை சொல்லியிருக்கிறார். கட்சியில் சேர்ந்த பின்னர் பேசிய சத்ருகன் சின்ஹா, 'பாஜகவில் மோடி ஒன்மேன் ஷோ காட்டி வருகிறார். மற்ற அமைச்சர்களுக்கு எல்லாம் அதிகாரம் இல்லை. பிரதமரின் அலுவலகம் மட்டுமே எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது' என்று கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டுகளாக சத்ருசன் சின்ஹா பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்காக அவரை ட்விட்டரில் பலரும் ஃபாலோ செய்கிறார்கள். கடந்த ஜனவரியில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தை மம்தா பானர்ஜி நடத்தினார். அதில் சத்ருகன் சின்ஹாவும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியில் சத்ருகன் சின்ஹா இன்று சேர்ந்தபோது மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், சின்ஹாவுக்கு கட்சித் துண்டு அணிந்து வரவேற்றார். பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு அவர் 10 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து சத்ருகன் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது-
நடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் எப்படி சர்வாதிகாரமாக மாறியுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அத்வானியை மார்தர்ஷக் மண்டல் எனப்படும் ஆலோசனை குழுவுக்கு பாஜக அனுப்பி விட்டது. இதுவரையும் அந்தக்குழு ஒரு கூட்டத்தை கூட கூட்டவில்லை.
யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் போன்றோருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. நான் தொடர்ந்து விமர்சித்து வருவதால் அமைச்சரவையில் எனக்கு இடம் இருக்காது என்று ஏற்கனவே நான் கூறினேன். இருப்பினும் எனது இமேஜ் சுத்தமாக உள்ளது.
மோடி செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் உலகிலேயே மிகவும் பெரிய முறைகேடாக இருக்கும். இதனால் மக்கள் சிலர் இறந்தனர். மோடியின் தாயாரே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரிசையில் நின்றார்.
இவ்வாறு சத்ருகன் சின்ஹா பேசினார்.