This Article is From Apr 19, 2019

''தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்'' : தேர்தலுக்கு பின்னர் தமிழிசை நம்பிக்கை!!

Election 2019: வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஒரு பைசா கூட தாங்கள் தரவில்லை என்று தூத்துக்குடி வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

Lok Sabha Election:தூத்துக்குடியில் மொத்தம் 69.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். 

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் களம் கண்டதால் தூத்துக்குடி மக்களவை தொகுதி தமிழகத்தின் நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. முக்கிய நகரங்களைப் போல இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் தூத்துக்குடி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பலரும் எதிர்பார்த்துள்ளனர். 

இந்த நிலையில் தூத்துக்குடியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றும், அங்கு தாமரை மலர்ந்தே தீரும் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுதொடர்பாக தேர்தலுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை கூறியிருப்பதாவது-
தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. 2 ஜி வழக்கில் சிக்கியவர்கள் திமுகவினர். அவர்களிடமிருந்து பணமழை பொழிவது ஆச்சர்யமில்லை. தூத்துக்குடியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இங்கு தாமரை மலர்ந்தே தீரும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Advertisement
Advertisement