This Article is From Mar 07, 2019

மக்களவை தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - ராகுல், சோனியா போட்டி

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் போட்டியிடுகின்றனர். பிரியங்கா போட்டியிடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

15 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

New Delhi:

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் குஜராத்தில் 4 பேரும், உத்தர பிரதேச தொகுதிகளில் போட்டியிடும் 11 பேரின் பெயரும் இடம்பெற்றுள்ளன. 

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிடுகின்றனர். 

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு கீழ் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன. அவரது பெயர் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. 

மற்ற வேட்பாளர்களை பொறுத்தவரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பரூக்காபாத் தொகுதியிலும், ஆர்பிஎன் சிங் குஷிநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

உத்தரபிரதேசத்தில் மசூத் சஹாரன்பூரிலும், ஜிதின்பிரசாத் தவுஹ்ராவிலும், அன்னு டாண்டன் உன்னாவோவிலும், ராஜாராம் பால் அக்பர்பூரிலும், பிரிஜ் லால் கப்ரி ஜலாவுன் தொகுதியிலும், நிர்மல் காத்ரி பைசாபாத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மறுத்ததை தொடர்ந்து 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

குஜராத்தை பொறுத்தளவில் ராஜு பார்மல் அகமதாபாத் மேற்கிலும், பிரசாந்த் படேல் வடோதராவிலும், ரஞ்சித் மோகன்சிங் சோட்டா உதய்ப்பூரிலும், பரத்சிங் சோலங்கி அனந்த் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

.