திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஹைலைட்ஸ்
- தமிழகம் மற்றும் புதுவையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக
- கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது
- நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார்.
மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் புதுவையில் உள்ள ஒரு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தளவில் காங்கிரசுக்கு 9 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வைகோவின் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஈஸ்வரனின் கொங்கு மக்கள் தேசிய கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள 20 தொகுதிகளில் திமுக களம் காணுகிறது. இந்த நிலையில் எந்தக் கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து கடந்த சில நாட்களாக திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இறுதியாக இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.