This Article is From Mar 27, 2019

ஜெ., உயிரோடு இருந்தால் ஒபிஎஸ் தனது மகனுக்கு சீட் வாங்க முடியுமா? ஸ்டாலின்

ஓபிஎஸ் மகன் என்பதை தவிர ரவீந்திரநாத்துக்கு வேறு ஏதேனும் தகுதிகள் உள்ளதா?

Advertisement
இந்தியா Written by

ஆட்சியை எதிர்த்து வாக்களித்த ஒருவர் துணை முதல்வராக இருக்க முடியுமா

ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு சீட் வாங்க முடியுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, கலைஞரின் உற்ற நண்பராக விளங்கிய ஈ.வி.கே.சம்பத்தின் மகன் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். திராவிடக் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக இருக்கக்‌கூடியவர் அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஓபிஎஸ் தனது மகனுக்கு சீட் வாங்கியிருக்க முடியுமா?, ஓபிஎஸ் மகன் என்பதை தவிர ரவீந்திரநாத்துக்கு வேறு ஏதேனும் தகுதிகள் உள்ளதா? எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓ.பி.எஸ்.

Advertisement

ஆட்சியை எதிர்த்து வாக்களித்த ஒருவர் துணை முதல்வராக இருக்க முடியுமா என்றார். சசிகலாவின் காலில் மண்புழு போல் ஊர்ந்து, தவழ்ந்து முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. திமுக விரும்புகின்றபடி ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி, ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்றார்.

Advertisement