This Article is From Feb 24, 2019

பொது வாழ்வில் வெற்றி பெற கமலை வாழ்த்திய ரஜினி!! வைரலாகும் ட்விட்டர் பதிவு

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். மக்களவை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கமல் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

இரு ஆளுமைகளின் ட்விட் பதிவுகளை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்

Highlights

  • கமல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது
  • பொது (அரசியல்) வாழ்வில் வெற்றி பெற கமலை வாழ்த்தியுள்ளார் ரஜினி
  • இருவரின் ட்விட்டுகளுக்கு ரீ ட்விட்டுகள் குவிந்து வருகின்றன.

கமலை வாழ்த்தி ரஜினியும், அதற்கு நன்றி தெரிவித்து கமலும் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

 

இதன் பின்னர் விஜயகாந்தை ரஜினி நலம் விசாரிக்கச் சென்றார். அவர் பாஜகவின் தூதராக செல்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், அவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பதிவில், கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...என்று கூறியுள்ளார். 

Advertisement

இதற்கு நன்றி தெரிவித்து கமல் தனது ட்விட்டரில் ‘' நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே.'' என்று பதிவிட்டுள்ளார். 

பொது வாழ்வு என்பது அரசியல் வாழ்வை குறிக்கும் என எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை மக்களவை தேர்தலில் கமலை ரஜினி ஆதரிக்கிறாரா என்பது தெரியவில்லை. இந்த இரு ஆளுமைகளின் ட்விட்டர் பதிவுகளை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பதிவுகள் வைரலாக மாறியுள்ளன. 

''முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...பொது வாழ்விலும் வெற்றி பெற'' என்ற ரஜினியின் ட்விட் பதிவு வரிகள் கவனிக்கத்தக்கவை....

Advertisement
Advertisement