This Article is From Mar 15, 2019

தொண்டர்களின் வேண்டுகோள்படி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!! - ஜெ. தீபா அதிரடி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ.தீபா மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement
இந்தியா Written by

ஏப்ரல் 18-ம்தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலளார் ஜெ.தீபா அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்துள்ளன. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள திமுக 20 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது.

இதுதொடர்பான தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளருமான ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது - 

தொண்டர்களின் விருப்பம் காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு  செய்துள்ளோம். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். இதுதொடர்பாக விருப்ப மனு பெறப்படும் தேதியை அறிவித்திருக்கிறோம். 

Advertisement

அதிமுகவுடன் சேர்ந்து செயல்பட 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்திருந்தோம். உடன்பாடு ஏற்படாததால் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம்.

இவ்வாறு ஜெ.தீபா கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement