முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
துணை முதல்வரும், அமைச்சர் ஜெயகுமாரும் என்னைச் சந்தித்து தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை மாற்றி அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டனர்.
அதன் அடிப்படையில் எங்கள் உயர்மட்டக் குழுவையும், மாவட்ட செயலாளர்களையும் கலந்து ஆலோசித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென்று முடிவு செய்துள்ளோம்.
அதிமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
சிறுபான்மையினர் நலன், சமத்துவம் ஆகியவற்றைச் சமரசம் செய்யக்கூடாது என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தனித்துப் போட்டி என்கிற எங்கள் நிலைப்பாட்டில் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
எங்கள் தேர்தல் அறிக்கையை, அதிமுகவிடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம். எனினும், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக சமக பாடுபடும் என்றார்.