This Article is From Feb 09, 2019

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு மோடி பயணம்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி அருணாசல பிரதேசம் செல்கிறார். அங்கிருந்து அவர் அசாமுக்கு செல்லும் மோடி, திரிபுராவில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • 3 மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறார் மோடி
  • அருணாச்சல், திரிபுரா, அசாம் மாநிலங்களுக்கு செல்கிறார் மோடி
  • குடியுரிமை மசோதா தொடர்பாக மோடிக்கு கடும் எதிர்ப்பு அசாமில் உள்ளது
Guwahati:

குடிமக்கள் திருத்த மசோதா தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

குடிமக்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014-க்கு முன்பு இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள ஆகியோருக்கு குடியுரிமை கிடைக்கும். 

வங்கதேசம் கடந்த 1971-ல் விடுதலை பெற்றது. அப்போது அங்கிருந்து வெளியேறிய இந்துக்கள் அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். அவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும் என கருதப்படுகிறது. இந்த விவகாரம் கொதிநிலையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.  அருணாசல பிரதேசத்தில் தூர்தர்ஷன் சேனலை மாநிலத்திற்கு அர்ப்பணம் செய்யும் மோடி, 110 மெகாவாட் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணம் செய்கிறார். 
 

k2o8k32g

அசாமில் வடகிழக்கு மாநிலங்களுக்கான கேஸ் தொகுப்புக்கான அடிக்கல்லை மோடி நாட்டுகிறார். இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு தடையற்ற கியாஸ் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கவுகாத்தி - பராவுனி இடையே 729 கிலோ மீட்டர் தூரத்திற்கான கேஸ் பைப்லைனுக்கான அடிக்கல்லையும் மோடி நாட்டி வைக்கிறார். 

திரிபுராவை பொறுத்தவரையில் கர்ஜீ - பெலோனியா இடையிலான ரெயில் பாதை மாநிலத்திற்கு மோடியால் அர்ப்பணிக்கப்பட உள்ளது. திரிபுரா தொழில்நுட்ப கல்லூரிக்கான வளாகத்தை மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 

.