கேரளாவில் நடைபெற்ற தேசிய மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி.
Thrissur: ஆட்சிக்கு வந்தால் மத்தியில் மீனவர் நலத்துறை அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற தேசிய மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது-
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவோம். நான் ஒன்றும் பிரதமர் மோடி மாதிரி கிடையாது . நான் ஒருபோதும் போலி வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்.
உங்களுக்கு முழுமையாக சேவையாற்றுவதற்காக இந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அனைத்து மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் டெல்லியில் அமைக்கப்படும்.
நான் ஒன்றை சொல்லும்போது எனது பேச்சை நன்றாக கவனியுங்கள். ஏனென்றால் நான் முடிவு எடுத்துவிட்டுதான் அதனை பேசுகிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.