This Article is From Mar 11, 2019

''டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை'' - முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி

கடைசி நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரபரப்பான அறிவிப்பை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

New Delhi:

மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். 

மத்தியில் பாஜக அரசை அகற்றுவதற்காக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வந்தன. ஆனால் எந்தக் கட்சிக்கும் பிடிகொடுக்காமல் ஆம் ஆத்மி தனக்கென ஒரு ரூட்டில் செல்லத் தொடங்கியது.

காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு ஆரம்பம் முதலே ராகுல் காந்தி அக்கறை காட்டவில்லை. இதற்கிடையே வலுவான கூட்டணி அமைப்பதற்கு ஆம் ஆத்மியின் ஆதரவு தேவை என்று ராகுல் காந்தியிடம் பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் பேட்டியளித்த அவர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று கூறினார். 

இந்த நிலையில், கூட்டணி குறித்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதனால், டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

டெல்லியில் 15 ஆண்டுகளாக நீடித்த காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு அப்புறப்படுத்தியது ஆம் ஆத்மி என்பது குறிப்பிடத்தக்கது. 

.