சரத்பவாரின் உறவினர் அஜித் பவார் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Pune: மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் பாஜகவுக்கு சிவசேனா என்றால், காங்கிரசுக்கு தேசியவாத காங்கிரஸ். மக்களவை தேர்தலில் இந்த 4 கட்சிகளும் 2 அணிகளாக இருந்து தேர்தலை சந்தித்து வருகின்றன.
காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைவதற்கு சரத் பவார் தீவிர முயற்சி செய்து வருகிறார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்பதால், அவர் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வலுவாக இருக்கும் தென்மேற்கு மகாராஷ்டிராவின் மாதா தொகுதியில் சரத்பவார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் முக்கியப் புள்ளியாக இருக்கும் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்தல் பணிகளை அவர் கவனிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.