முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார் சுஜய் விகே.
Mumbai: மகாராஷ்டிர அரசியலில் முக்கிய திருப்பமாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விகேவின் மகன் சுஜய் விகே பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பின்னடைவாக மாறியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் முன்னிலையில் சுஜய் பாஜகவில் இணைந்திருக்கிறார். ராதா கிருஷ்ணன் குடும்பத்தை பொறுத்தவரையில் அவர்கள் 4-ம் தலைமுறையாக அரசியலில் இருந்து வருகின்றனர்.
காங்கிரஸ் தரப்பில் விகேவின் குடும்பத்தினர் வலுவாக இருக்கும் அகமது நகர் தொகுதியில் போட்டியிட சுஜய்க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுஜய் நரம்பியல் நிபுணராக இருந்து வருகிறார். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு செய்துள்ளது. அகமது நகர் தொகுதி புனேவில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்கு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். மகாராஷ்டிராவை பொறுத்தளவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.