This Article is From Mar 15, 2019

பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12-க்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12-க்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறுகிறது.

ஹைலைட்ஸ்

  • மக்களவை தேர்தல் வருவதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க உத்தரவு
  • பள்ளிகள்தான் பெரும்பாலும் வாக்குச் சாவடிகளாக செயல்படும்
  • தேர்தல் ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளதால் பள்ளி கல்வித்துறை உத்தரவு

மக்களவை தேர்தலையொட்டி பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ம்தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம்தேதி தொடங்கி மே மாதம் 19-ம்தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி வெளியிடப்படுகின்றன. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் பள்ளிகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

பொதுவாக வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ம்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

10,11 மற்றம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 29-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 12-ம்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான கால அட்டவணையை மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். 
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.