This Article is From Jan 25, 2019

கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது தேமுதிக

தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது தேமுதிக

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன
  • கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை பொது செயலாளர் விஜயகாந்த் அமைத்துள்ளார்
  • திமுக, அதிமுக தரப்பில் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சி குழுவை அமைத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, அக்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவும், திமுகவும் குழுக்களை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் கூட்டணியை அமித் ஷாவும், பிரதமர் மோடியும் முடிவு செய்வார்கள் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

.