हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 14, 2019

‘’கூட்டணிக்கு காங்கிரஸ்தான் வேண்டாம் என்கிறது’’ – கெஜ்ரிவால் ஆதங்கம்

பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement
இந்தியா
New Delhi:

தங்களுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ்தான் வேண்டாம் என்று கூறி வருவதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் காங்கிரசுடன் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை.

சரத்பவார் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற கெஜ்ரிவால், மம்தா, சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் சந்திர பாபு நாயுடுவை காங்கிரஸ் ஒதுக்கி விட்டது. இத்தகைய சூழலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையேற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவருக்குமான பொது எதிரி பாஜக என்ற அடிப்படையில் மக்களவை தேர்தலில் அனைவரும் சேர்ந்து கூட்டணி வைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்த நிலையில் பேச்சுவார்த்தை குறித்து பேட்டியளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டைப் பற்றி நாங்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறோம். எனவேதான் கூட்டணி மீதான அக்கறை எங்களுக்கு அதிகம் இருக்கிறது. காங்கிரஸ்தான் கூட்டணி வேண்டாம் என்பதைப்போல பேசி வருகிறது என்றார்.

Advertisement