This Article is From Jan 29, 2019

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளை கைப்பற்ற தீவிரம் காட்டும் பாஜக

தலைநகர் லக்னோவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டத்தை, கும்பமேளா நடக்கும் பிரக்யாராஜ் நகரில் யோகி ஆதித்யநாத் கூட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளை கைப்பற்ற தீவிரம் காட்டும் பாஜக

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் முக்கிய துருப்புச் சீட்டாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார்.

ஹைலைட்ஸ்

  • உத்தரப்பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற பாஜக முயற்சி
  • முதன்முறையாக லக்னோவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம்
  • கும்பமேளாவுக்கு மோடி, ராகுல் வருவார்கள் என எதிர்பார்ப்பு
Prayagraj:

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான வியூகங்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வகுத்து வருகிறார். இந்த நிலையில் தனது ஆட்சியில் முதன் முறையாக தலைநகர் லக்னோவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் இன்று நடத்துகிறார். 

பிரக்யாராஜ் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கியமாக பேசப்பட உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் முதன்மை மாநிலமாக இது விளங்குகிறது. 
 

nqj4tcqo

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் ஒன்றிணைந்து இந்த மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றன. 

இந்த இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளினால் மட்டுமே மோடியின் பிரதமர் கனவு பலிக்கும் என்பதால் உத்தரப்பிரதேசத்திற்கு பாஜக அதிக கவனம் எடுத்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் கும்பமேளா வாக்கு வங்கியை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

கடந்த ஞாயிறன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கும்பமேளா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புனித நீராடினார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கும்ப மேளாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.