Read in English
This Article is From Mar 19, 2019

‘மாதாந்திர நேரடி உதவித்தொகை ரூ.1500!’- அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளன.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளன. இந்நிலையில் அதிமுக, மக்களவைத் தேர்தலுக்கான தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இன்று சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார். அப்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஹைலைட்ஸ்:

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் மூலம், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்

Advertisement

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சியை, எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படும் 

காவேரி, கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

Advertisement

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Advertisement

ஜாதி சான்றிதலில் மாற்றமின்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்

Advertisement

மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய  அரசிடம் வலியுறுத்தப்படும்

தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்

Advertisement

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் 


 

Advertisement