हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 19, 2019

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியா? - முக்கிய தகவல் அளித்த காங்கிரஸ் தலைவர்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித்துடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது பவாரின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by

ஆம் ஆத்மியுடனான கூட்டணி குறித்து ஷீலா தீக்சித் என்.டி.டி.விக்கு பேட்டி அளித்துள்ளார்.

New Delhi:

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்களும், கட்சிக்குள் இருக்கும் தலைவர்கள் சிலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித் முக்கியமான பதிலை அளித்துள்ளார். 

டெல்லியில் கூட்டணி வைக்க ஆம் ஆத்மி கட்சி நெருங்கி வந்தது. ஆனால் ராகுல் தரப்பில் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பொறுமை இழந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன. ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து அது பாஜகவின் வெற்றிக்கு வழி வகுக்கும் என தெரிய வந்தது. 

Advertisement

இதையடுத்து ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர் கூட்டணி குறித்து ஆம் ஆத்மி தலைவர்களுடனும் ஆலோசனை செய்தார். 

இந்த சந்திப்புக்கு பின்னர் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித் அளித்த என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

Advertisement

கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம். கூட்டணி அவசியம் என்று நான் கருதவில்லை. ஆனால் கூட்டணிதான் வேண்டும் என்று கட்சி முடிவு எடுத்தால் அதற்கு நான் கட்டுப்படுவேன். 

தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் சக்தி உள்ளது. ஆனால், எல்லோரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். 

Advertisement

இவ்வாறு ஷீலா தீக்சித் கூறியுள்ளார். அவரது கருத்துப்படி, ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாகவே கருதப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என தெரிகிறது. 
 

Advertisement