நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
திமுக - அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தொகுதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில், 8 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அத்துடன் திமுகவும் - பாமகவும் 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிகவும் - பாமகவும் ஒரு தொகுதியில் நேடியாக மோதுகின்றன.
அப்படி அதிமுக - திமுக நேரடியாக மோதும் தொகுதிகள் விவிரம்,
1. தென்சென்னை
2. காஞ்சிபுரம்
3. நெல்லை
4. திருவண்ணாமலை
5. சேலம்
6. நீலகிரி
7. பொள்ளாச்சி
8. மயிலாடுதுறை
திமுக - பாமக நேரடியாக மோதும் 6 தொகுதிகள்,
1. மத்திய சென்னை
2. தருமபுரி
3. அரக்கோணம்
4. ஸ்ரீபெரும்புதுர்
5. கடலூர்
6. திண்டுக்கல்
பாமகவும் - விடுதலை சிறுத்தைகளும் விழுப்புரம் தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. இந்த தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். பாமக சார்பில் இன்னும் வேட்பாளர் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதேபோல், விசிக தலைவர் திருமாவளவன் தனிசின்னத்தில் போட்டியிடும் தொகுதியான சிதம்பரத்தில் அதிமுக போட்டியிடுகிறது.
தேசிய கட்சிகளான பாஜகவும் - காங்கிரசும் கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.