This Article is From May 18, 2019

'தேர்தல் பிரசாரத்திற்காக ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் பயணம் சென்ற மோடி' : அமித் ஷா தகவல்

46 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெயிலில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டதாக அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

'தேர்தல் பிரசாரத்திற்காக ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் பயணம் சென்ற மோடி' : அமித் ஷா தகவல்

பாஜகவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாக அமித் ஷா கூறியுள்ளார்.

New Delhi:

மக்களவை தேர்லையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் வான்வெளி பயணம் செய்ததாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 

பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியதாவது- 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் இந்த மக்களவை தேர்தல் பிரசாரம் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இதுவரையில்லாத அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

நாட்டின் பெரும்பான்மை இடங்களுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். மீரட்டில் கடந்த மார்ச் 28-ம்தேதி பாஜக தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. மோடி இதுவரைக்கும் 142 பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். 

பொதுக்கூட்டங்களின் மூலம் ஒன்றரை கோடி பேரிடத்தில் மோடி நேரடியாக பேசியுள்ளார். வான்வெளியாக மட்டும் ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் பயணம் சென்றிருக்கிறார். நான் 312 மக்களவை தொகுதிக்கு சென்று 161 பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளேன். 

இவ்வாறு அமித் ஷா பேசினார். 

.