This Article is From Apr 03, 2019

''மாயாவதியை பிரதமராக்க வேண்டும்'' - பவன் கல்யாண் வலியுறுத்தல்

ஆந்திராவில் ஜன சேனா என்ற கட்சியை பிரபல நடிகர் பவன் கல்யாண் நடத்தி வருகிறார். தெலங்கானாவிலும் அவரது கட்சி செயல்பட்டு வருகிறது.

''மாயாவதியை பிரதமராக்க வேண்டும்'' - பவன் கல்யாண் வலியுறுத்தல்

மாயாவதியை பிரதமராக பார்க்க விரும்புவதாக பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Vizag:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை பிரதமராக்க வேண்டும் என்று பிரபல நடிகரும், ஜன சேன கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார். 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். 

இந்த நிலையில் விசாக பட்டினத்தில் பவன் கல்யாணும், மாயாவதியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பவன் கல்யாண் கூறியதாவது-

இந்தியா என்னும் மிகச்சிறந்த நாட்டின் பிரதமராக மாயாவதியை பார்க்க விரும்புகிறோம்.  மிகவும் அனுபவமும், திறமையும் கொண்ட ஒருவர் இந்த நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பது எங்களது விருப்பம்.
தெலுங்கு மொழி மக்களுக்கும் மற்ற மாநிலத்தவர்களுக்கும் எங்களால் முடிந்த சேவையை செய்வோம். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிகளை குவிக்கும்.
இவ்வாறு பவன் கல்யாண் கூறினார். 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எந்த வித வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 

ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தெலங்கானாவில் மொத்தம் 17 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. 
 

.