பாகிஸ்தான் அரசு பேசுவதைப் போல காங்கிரஸ் பேசுவதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Ausa, Maharashtra: 1947-ல் பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.
அவுசா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-
முதன் முறையாக வாக்களிக்கும் நபர்கள் பாலகோட்டில் பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் யோசனையுடன் நடந்திருந்தால் பாகிஸ்தான் என்ற நாடு பிறந்திருக்காது.
பாகிஸ்தான் என்ற நாடு உருவானதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்துப் பாருங்கள். அதில் உள்ளவை பாகிஸ்தான் எப்படிப் பேசுகிறதோ அதே போன்றுதான் அமைந்திருக்கும்.
காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிராவில் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்தியாவுக்கு ஒரு பிரதமர், ஜம்மு காஷ்மீருக்கு ஒரு பிரதமர் வேண்டும் என்கிறார்கள்.
நாட்டின் நலன்களை பாதுகாக்கவும், விவசாயிகளை வளப்படுத்தும் வகையிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நாங்கள் வகுத்துள்ள புதிய இந்தியாவில் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள்.
இவ்வாறு மோடி கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)