This Article is From Apr 02, 2019

வன்னியர் சமுதாயத்துக்கு செய்த நலன்களை கூற முடியுமா? ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

வன்னியர் சமுதாயத்துக்கு செய்த நலன்களை கூற முடியுமா? ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

வன்னியர் சமுதாயத்துக்கு செய்த நலன்களை கூற முடியுமா? ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

வன்னியர் சமூதாயத்துக்கு எந்த நலனையும் பாமக செய்யவில்லை, அந்த சமூகத்தை ராமதாஸ் ஏமாற்றுகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், சாதாரணமாக இந்த பொறுப்புக்கு நான் வரவில்லை. கட்சியில் அடிப்படை உறுப்பினர் முதல் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தலைவர் பதவிக்கு வந்துள்ளேன். 50 ஆண்டுகள் திமுகவுக்காக பாடுபட்டதால் நான் துணை முதல்வரானேன்.

பாமகவை முதன் முதலில் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைத்தவர் கலைஞர். அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றபோது கோபத்தில் வந்தார் ராமதாஸ். அப்போது, ராமதாஸின் கையை பிடித்து கவலைப்படாதீர்கள் அன்புணியை அமைச்சராக்குவேன் என கூறினார் கலைஞர். பின்னர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரிடம் பேசி அன்புமணியை சுகாதாரத்துறை அமைச்சராக்கினார். அந்த பெருமை திமுகவையே சேரும்.

பாமகவிற்கு திமுக மீது என்ன கோபம்? வன்னியர் சமூதாயத்திற்கு தான் தான் பாடுபடுவது போல், போராடுவது போல் அவர் அதை கூறி அரசியல் செய்தார். அப்போது, கலைஞர் ஆட்சிக்கு வருகிறார். அப்போது, வன்னியர் சமூதாயத்திற்கு என்னென்ன தேவை எவ்வளவு இடஒதுக்கீடு தேவை, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து உடனடியாக அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

இதனால், இனி அந்த சமூதாயத்திற்கு பாடுபடுவதாக கூற முடியாது என்கிற கோபமே ராமதாசுக்கு உள்ளது. இதெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. அதை வைத்தே ராமதாஸ் அவர்களை ஏமாற்றி வருகிறார். இந்த மேடையில் ராமதாசுக்கு சவால் விடுகிறேன், இத்தனை ஆண்டுகளில் வன்னியர் சமூதாயத்திற்காக நீங்கள் செய்துள்ள சாதனை ஒன்று அல்லது இரண்டை சொல்ல முடியுமா? உங்கள் குடும்பத்தை தவிர வேறு யாராவது முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

.