This Article is From Mar 27, 2019

''பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட அனுமதிபெறத் தேவையில்லை'' : தேர்தல் ஆணையம்

இந்தியாவுக்கு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு நடந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையிலும் இந்தியா எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன் கொண்டது என்றும் மோடி பெருமை தெரிவித்துள்ளார்.

''பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட அனுமதிபெறத் தேவையில்லை''  : தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் பிரதமர் மோடியின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தேர்தல் நேரத்தில் மோடியின் அறிவிப்பு வெளியானதாக எதிர்க்கட்சிகள் கேள்வி
  • விளம்பரத்திற்காக மோடி அறிவிப்பு செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
  • ''தேசிய பாதுகாப்பு அறிவிப்புகள் தேர்தல் விதிகளை மீறியதாக கருதப்படாது''
New Delhi:

பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட அனுமதி பெறத் தேவையில்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடி மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருக்கிறது. இன்று காலை சுமார் 11.30-க்கு ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, காலை 11.45-12.00-க்குள் நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியிருந்தார். 

இருப்பினும், நண்பகல் 12.20-க்கு மேல் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியானது. அதில் பேசிய மோடி, ''
இந்தியா தற்போது முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சோதனையை இந்தியாதான் செய்துள்ளது.

இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

மிஷன் சக்தி திட்டம் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி. நாம் எல்லோரும் இது குறித்து பெருமைப்பட வேண்டும். தரை வழியாக, நீர் வழியாக மற்றும் ஆகாய வழியாக மட்டுமல்ல, இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது'' என்று கூறியிருந்தார். 

இந்தியாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், மோடியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட அனுமதி ஏதும் பெறத் தேவையில்லை என்று கூறியுள்ளது. 
 

.