Lok Sabha Elections 2019: திரிபுராவில் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன.
New Delhi: திரிபுராவில் கடந்த ஏப்ரல் 11-ம்தேதி மேற்கு மக்களவை தொகுதியில் தேர்தல் நடந்தது. இது செல்லுபடியாகாது என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் மே 12-ம்தேதி அங்கு மறு தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கிழக்கு மற்றும் மேற்கு என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் மேற்கு மக்களவை தொகுதியில் கடந்த 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 168 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும் மே 12-ம்தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் சிம்னா, மோகன்பூர், பமுதியா, பர்ஜலா, காயர்பூர்,ராம்நகர், டவுன் போர்தாவலி,மஜ்லிஸ்பூர், மண்டல் பஜார், டகர்ஜலா, பிரதாப்கர், பதர்காட், கமலாசாகர், பிஷலாகர், கோல்கட்டி, சரிலாம், பாக்சாநகர், நல்சார், சோனம்புரா, தன்பூர், பக்மா, ராதாகிருஷ்ணபூர், மதாபரி, கக்ராபன் சல்கார், ராஜ்நகர், பெலோனியா ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.
முதல்கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் திரிபுரா மேற்கு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்தது. மிகவும் அதிகமான வாக்குப்பதிவான 5 மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இங்கு 83.26 சதவீத வாக்குகள் பதிவானது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.