Read in English
This Article is From Mar 30, 2019

‘’உரிமம் உள்ளவர்களின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதை உறுதி செய்யுங்கள்’’ : தேர்தல் ஆணையம்

உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்துபவர்கள் தங்களது துப்பாக்கிகளை தேர்தல் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.

Advertisement
இந்தியா Edited by

தேர்தல் வன்முறைகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Agartala:

உரிமம் பெற்று துப்பாக்கிகளை பயன்படுத்துவோர், அவற்றை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்களா என்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்துபவர்கள் தங்களது துப்பாக்கிகளை தேர்தல் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நேர வன்முறைகளை தவிர்ப்பதற்காக மாநில நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘'பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் பெற்று துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அசம்பாவிதத்தை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

இதன் ஒருபகுதியாக உரிமம் பெற்று துப்பாக்கிகளை பயன்படுத்துவோர் தேர்தல் காலம் முடியும் வரையில் தங்களது துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விதி நிறைற்றப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது'' என்று தெரிவித்தனர்.

இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188-ன்படி ஒரு மாதம் வரை சிறை விதிக்க வாய்ப்புண்டு.

Advertisement
Advertisement