Election 2019: Atishi Marlena தனக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா என காம்பீர் சவால் விடுத்துள்ளார்.
New Delhi: துண்டுப் பிரசுர விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார். அவரை டெல்லியின் கிழக்கு மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் சார்பில் அதிஷி நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, தன்னை விமர்சித்து பாலியல் ரீதியாக கவுதம் காம்பீர் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்று குற்றம் சாட்டினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு காணப்பட்டது.
இந்த விவகாரத்தை காம்பீரை ஆம் ஆத்மி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காம்பீர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என கற்பனையிலும் நினைக்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள காம்பீர், தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விலகிக் கொள்வதாக கூறியுள்ள காம்பீர், நிரூபிக்க தவறினால் ஆம் ஆத்மி தலைவர்கள் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு காம்பீர் அளித்த பேட்டியில் அரிவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
காம்பீர் அளித்த பேட்டியில், ‘அதிஷிக்கு எதிரான துண்டு பிரசுரம் விநியோகித்தவர்களை கண்டிக்கிறேன். நான் மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவன். பெண்களுக்கு மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து என் குடும்பத்தினர் என்னை வளர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் தரம் தாழ்ந்து செயல்படுகிறார்' என்று கூறினார்.