This Article is From Mar 27, 2019

டெல்லியில் பாஜக சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் போட்டி?-விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

டெல்லி வேட்பாளர்கள் தொடர்பாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட பட்டியலை பாஜக தேசிய தலைமை மாற்றி அமைத்துள்ளது. தற்போது புதிய பட்டியலில் கூடுதல் பெயர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் போட்டி?-விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

பாஜகவில் கவுதம் காம்பீர் சேர்ந்தபோது எடுத்த படம்

New Delhi:

டெல்லியில் பாஜக சார்பாக மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி வேட்பாளர்களை பொறுத்தளவில் ஏற்கனவே 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தது. 

இந்த பட்டியலை மாற்றி அமைத்தள்ள பாஜக தேசிய தலைமை, புதிய 31 பேர் அடங்கிய பட்டியலை தயார் செய்துள்ளது. இதில் கவுதம் காம்பீர் பெயர் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து டெல்லி பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே இருந்த பட்டியலில் கூடுதலாக 10 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார். 

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த கவுதம் காம்பீர், டெல்லி ஐ.பி.எல். அணி உருவாக்கப்பட்டபோது கேப்டனாவும் செயல்பட்டிருக்கிறார். டெல்லி அவருக்கு சொந்த ஊர் என்பதால், அவரை நிறுத்தினால் வெற்றி  பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக கருதுகிறது. 

காம்பிர் கடந்த வாரம்தான் பாஜகவில் இணைந்தார். புதுடெல்லி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்கு மீனாட்சி லேகி உறுப்பினராக உள்ளார். 

பிரபலங்களை தேர்தலில் போட்டியிட வைக்கக் கூடாது என்று பாஜகவின் டெல்லி பிரிவு கருதுவதாக தெரிகிறது. இது கட்சியின் தேசிய தலைமைக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. 

டெல்லியில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தையும் பாஜக தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆம் ஆத்மியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.