This Article is From Mar 27, 2019

ரூ. 101 கோடி சொத்து வைத்திருக்கும் பாஜகவின் நடிகை வேட்பாளர்!!

அசையும், அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ. 101 கோடி பாஜக வேட்பாளரிடம் உள்ளது. அவர் கடந்த 2014-ம் ஆண்டின்போது சொத்து விவரத்தை தாக்கல் செய்தார். அப்போது அவற்றின் மதிப்பு ரூ. 66 கோடியாக இருந்தது.

ரூ. 101 கோடி சொத்து வைத்திருக்கும் பாஜகவின் நடிகை வேட்பாளர்!!

மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார்.

Mathura:

உத்தர பிரதேசத்தில் மதுரா தொகுதியின் வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இவர் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்தபோது, மொத்தம் ரூ. 101 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஹேம மாலினியின் சொத்து மதிப்பு ரூ. 34 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஹேமமாலினி தனது சொத்து விவரங்களில் பங்களாக்கள், நகைகள், ரொக்கப்பணம், டெபாசிட் செய்த தொகை உள்ளிட்டவைகளை குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2014-ல் ஹேமமாலினி சொத்து விவரத்தை தாக்கல் செய்தபோது அவரிடம் ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது கணவரும் மூத்த நடிகருமான தர்மேந்திரா சிங் தியோலுக்கு ரூ. 12.30 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். 

ஹேமமாலினி தனது வேட்பு மனுவில் மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா கார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கணவன் மனைவி ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 123.85 கோடியாக உள்ளது. இதைத் தவிர்த்து தனக்கு ரூ. 6.75 கோடி கடனும், தனது கணவருக்கு ரூ. 7.37 கோடி கடனும் இருப்பதாக ஹேமமாலின் கூறியுள்ளார். 

2014-ல் மதுரா மக்களவை தொகுதியில் இருந்து உறுப்பினர் ஆகுவதற்கு முன்பாக 2003 முதல்  2009 வரையிலும், 2011 முதல் 2012 வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராக ஹேமமாலினி இருந்தார். சுற்றுலா, போக்குவரத்து, கலாசாரம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்திருக்கிறார். 

.