Elections 2019: சென்னை சாலிகிராமத்தில் தமிழிசை சவுந்தர ராஜன் வாக்களித்தார்.
Lok Sabha Elections 2019: ஒரு பைசா மக்களுக்கு தரவில்லை. ஆனாலும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அதன் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
முன்னதாக வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல், பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடியில் எதுவும் கைப்பற்றப்படாததால் தேர்தல் நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில், வாக்களித்த பின்னர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
தூத்துக்குடி தொகுதியில் நான் ஒரு பைசா கூட மக்களுக்கு தரவில்லை. ஆனாலும் அவர்கள் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். ஏனென்றால் நான் அன்பைக் கொடுத்திருக்கிறேன். ஆதரவை கொடுத்திருக்கிறேன். அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறேன். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.