This Article is From Apr 03, 2019

''இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடம்'' : முதல்வர் பிரசாரம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

''இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடம்'' : முதல்வர் பிரசாரம்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அக்கட்சி கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 5 மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. 

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் கனிமொழி நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தில் கவனிக்கப்படும் தொகுதியாக தூத்துக்குடி மாறியுள்ளது. 

இந்தநிலையில் தமிழிசையை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

தைத் திங்கள் வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 1000 பரிசு வழங்குவது தமிழகம்தான். தமிழகத்தில் 17 லட்சம் வீடுகளை கட்டித் தரும் பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். 

இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவோம். மத்திய நிலையான ஆட்சி வரவேண்டும். திறமையான நபரான மோடி பிரதமராக வர வேண்டும்.  இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தூத்துக்குடியில் அதிமுக அரசு நிறைவேற்றிய நலத்திட்ட பணிகளையும் முதல்வர் பட்டியலிட்டு வாக்குகளை சேகரித்தார். 

.