This Article is From Apr 18, 2019

''தோல்வி பயத்தால்தான் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது'' - கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் இல்லத்தின் நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement
இந்தியா Written by

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக தரப்பில் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடுகிறார்.

தேர்தல் தோல்வி பயத்தால்தான் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி வேட்பாளராக திமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி தொகுதியில் தங்கி பிரசாரம் மேற்கொண்டார். அவரது தூத்துக்குடி வீட்டில் பணப்பட்டுவாடா செய்வதற்கு பணம் பதுக்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

இதுகுறித்து கனிமொழி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த, அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த தோல்வி பயத்தால் இதுபோன்று வருமான வரித்துறையை ஏவி விடுகிறார்கள்.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் அதிமுக, பாஜக மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பது கிடையாது. 

Advertisement

 எப்படியாவது பழிவாங்க வேண்டும், கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என சோதனை நடக்கிறது. எந்தஒரு ஆவணமும் இல்லாமல் சோதனை நடக்கிறது. வேட்பாளருக்கு எதிரான சோதனை என்கிறார்கள். வேட்பாளர் என்பதற்காக யார் வேண்டுமானாலும் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தலாமா?
இவ்வாறு கனிமொழி கூறினார்.
கனிமொழி விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதரம்பரம் தனது ட்விட்டர் பதிவில், திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?!. 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே. என்று கூறியுள்ளார்.
 

Advertisement