This Article is From Mar 29, 2019

''தேர்தல் அறிக்கை வெளியிட திமுக என்ன ஆளுங்கட்சியா?'' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement
இந்தியா Written by

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியிட்டு அவற்றை நிறைவேற்ற திமுக என்ன ஆளுங்கட்சியா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவும், திமுகவும் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அதிமுகவில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

விழுப்புரம் தொகுதியில் பாமக வேட்பாளராக வடிவேல் ராவணன்  நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

Advertisement

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சி செய்கிறது. திமுகவின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. 

அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதற்கு திமுக என்ன ஆளுங்கட்சியா? 

Advertisement

எதை வேண்டுமானாலும் தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களை குழப்பி, குறுக்கு வழியில் வாக்குகளை வாங்கலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Advertisement