தூத்துக்குடியில் தமிழிசையை எதிர்த்து திமுக தரப்பில் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரமும், கனிமொழியும் ஊழல் கறை படிந்தவர்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டி கார்த்தி சிதம்பரம், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, நீலகிரியில் போட்டியிடும் திமுகவின் ஆ. ராசா ஆகியோர் ஊழல் கறை படிந்தவர்கள்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தை வளர்ச்சி பெறத் தேவையான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக பெரிய அளவில் கூட்டணியின்றி பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)