This Article is From Apr 16, 2019

தேர்தல் எதற்கு? இந்தியாவையே ஏலத்திற்கு விடலாமே! – சீமான் காட்டம்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்களது சின்னமான கரும்பு விவசாயி சின்னம் திட்டமிட்டு மறைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தேர்தல் எதற்கு? இந்தியாவையே ஏலத்திற்கு விடலாமே! – சீமான் காட்டம்!!

சின்னம் தொடர்பாக நாம் தமிழர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

தேர்தல் எதற்கு? இந்தியாவையே ஏலத்திற்கு விடலாமே! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களது கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டது ஆணையத்திற்கு எப்படி தெரியும்?. அப்படித் தெரிந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

கோடிக்கணக்கில் செலவழித்து பதாகைகளை தேர்தல் ஆணையம் வைக்கிறது. 100 சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதை செலுத்த வைக்க என்ன முயற்சி எடுக்கப்படுகிறது. வெறும் பதாகைகளுடன் முடிந்து விடுகிறதா தேர்தல் ஆணையத்தின் சமூக பொறுப்பு?.

அப்பாவி மக்களின் பணத்தைத்தான் பறக்கும்படை பறிமுதல் செய்கிறது. பணப் பட்டுவாடாவை பறக்கும்படை தடுத்து நிறுத்தி விட்டதா? கட்டமைப்பு தவறாக உள்ளது.

கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை தனியார்தான் சிறப்பாக செய்கிறது என்று அரசு நம்பினால் எதற்காக தேர்தல் நடத்தப்பட வேண்டும்? இந்தியாவையே ஏலத்திற்கு விடலாமே! அதானி 5 ஆண்டுகள் ஏலத்திற்கு எடுத்து ஆளட்டும். அம்பானியும் ஆளட்டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

.