This Article is From Apr 10, 2019

தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Written by

தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தின் புதிய காவல்துறை தலைவராக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. 

தமிழக டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இந்த நிலையில் அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை நேர்மையாக நடத்தும் விதமாக தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணிப்பது, வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக தமிழக காவல்துறை தலைவர் மாற்றப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோன்று மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. 

Advertisement
Advertisement