Read in English
This Article is From Apr 05, 2019

''நிதி ஆயோக் துணைத் தலைவர் விதிகளை மீறியுள்ளார்'' : தேர்தல் ஆணையம் பரபரப்பு கடிதம்

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் நிலாவை தருவேன் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்கும் என அவர் கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

ராஜிவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருக்கிறது.

New Delhi:

தேர்தல் நடத்தை விதிமுறைக மீறியதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் மீது தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் நிலாவை தருவேன் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்கும் என அவர் கூறியிருந்தார். 

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி பேரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. 

இதனை விமர்சித்த நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், '' காங்கிரஸ் அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் என்பது நடைமுறையில் சாத்தியம் அற்றது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிலாவை தருவேன் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளிக்க்கும்.'' என்று கூறியிருந்தார். 

Advertisement

ஓர் அரசு அதிகாரி இவ்வாறு கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், ராஜீவ் குமாரின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவர், விதிகளை மீறி விட்டதாக கூறியுள்ளது. 

இதுதொடர்பாக அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது-

Advertisement

எந்தப் பக்கமும் சார்பில்லாமல்தான் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நீங்கள் தெரிவித்த கருத்துகள் தேர்தல் விதிமுறைகளை நீங்கள் மீறியுள்ளதை காட்டுகிறது. இதுபோன்று எந்தவொரு கருத்தையும் நீங்கள் எதிர்காலத்தில் தெரிவிக்க கூடாது. 

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement