6 மாதங்களில் நாட்டில் வறுமையை ஒழிப்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாக ராகுல் கூறியுள்ளார்.
Suratgarh: ரூ. 6 ஆயிரம் மாதாந்திர திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் நடவடிக்கை வறுமை மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 20 சதவீதம் இந்திய குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்த அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கரில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, '' இந்தியாவில் வறுமையை முற்றிலும் துடைத்தெறிவோம். எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் இதுபோன்ற நிகழ்வு வரலாற்றில் நடக்காது. நாட்டில் ஒரு குடிமகன்கூட ஏழையாக இருக்க மாட்டார்கள்'' என்று பேசினார்.
நியுந்தம் ஆய யோஜனா என்ற திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிமுகம் செய்தார். இதன்படி 5 கோடி குடும்பத்தினருக்கு மாதம் தலா ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ராகுல், பிரதமர் மோடி பணக்காரர்களுக்கு பணத்தை வழங்கினால், அதனை ஏழைகளுக்கு காங்கிரஸ் வழங்கும் என்று கூறினார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், '' வறுமை ஒழிப்பு என்ற முறையில் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து விடலாம் என்று காங்கிரஸ் நம்பிக் கொண்டிருக்கிறது'' என்றார்.
மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் 12.5 கோடி பேர் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.