This Article is From Mar 25, 2019

''ப. சிதம்பரம் குடும்பத்தையே மக்கள் வெறுக்கின்றனர்'' : சுதர்சன நாச்சியப்பன் கடும் தாக்கு

சிவகங்கை வேட்பாளராக சுதர்சன நாச்சியப்பன் அல்லது கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

''ப. சிதம்பரம் குடும்பத்தையே மக்கள் வெறுக்கின்றனர்'' : சுதர்சன நாச்சியப்பன் கடும் தாக்கு

சுதர்சன நாச்சியப்பன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் குடும்பத்தையே மக்கள் வெறுத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் விமர்சித்துள்ளார். 

சிவகங்கை வேட்பாளராக சுதர்சன நாச்சியப்பன் அல்லது கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுதர்சன நாச்சியப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது-

நான் அறிந்த வரையில் ப. சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுத்து வருகின்றனர். சிவகங்கை மக்களுக்கென்று சிதம்பரம் எதுவுமே செய்யவில்லை. அங்கு கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக நிறுத்தியிருப்பது என்பது காங்கிரசின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. 

எனது வளர்ச்சியை சிதம்பரம் பலமுறை தடுக்கப் பார்த்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நான் பொறுப்பேற்பதை தடுத்தார். அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படுவதையும் தடுக்க முயன்றார். 

இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தன் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை என்றும், தவறாக தன்மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

சுதர்சன நாச்சியப்பன் கருத்து குறித்து பதில் அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ''எவருக்கும் மன வருத்தம் இருந்தால் அதனை நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமே தெரிவிக்கலாம்'' என்றார். 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.