This Article is From Mar 18, 2019

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் விவரம்!

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் விவரம்!

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

திமுக - அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தொகுதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில், 8 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அத்துடன் திமுகவும் - பாமகவும் 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிகவும் - பாமகவும் ஒரு தொகுதியில் நேடியாக மோதுகின்றன.

இந்தநிலையில், நேற்று காலை தொகுதி விவரங்களை வெளியிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி, நேற்று இரவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் 5 பேர் பெயர்கள் கொண்ட முதல்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, வேட்பாளர்கள் விவரம் வருமாறு,

1. தர்மபுரி- அன்புமணி ராமதாஸ்,

2. விழுப்புரம்- வடிவேல் ராவணன்(பாமக பொதுச் செயலாளர்),

3. கடலூர்- ரா.கோவிந்தசாமி (பாமக சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர்),

4. அரக்கோணம்- முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி,

5. மத்திய சென்னை- முனைவர் சாம் பால் (பா.ம.க தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர்)

உள்ளிட்ட 5 பேர் பெயர் பட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2 பேர் பெயர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

 

மேலும் படிக்கமக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - முழுவிவரம்

.