This Article is From Apr 18, 2019

மக்களவை தேர்தல் : பரபரப்பான சூழலில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு!!

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மக்களவை தேர்தல் : பரபரப்பான சூழலில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு!!

தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பரபரப்பான சூழலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 95 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

2-ம் கட்டத் தேர்தலில் 11 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு திரிபுரா தொகுதி வாக்குப்பதிவு 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூர் தேர்தலை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மற்ற மாநிலங்களை பொறுத்தளவில், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், ஒடிசா, பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்திஸ்கர், மேற்குவங்கம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளிலும் காஷ்மீரின் 2 தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

.